/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவில் வரும் 9ல் கும்பாபிஷேகம்
/
திரவுபதியம்மன் கோவில் வரும் 9ல் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 02, 2025 08:21 PM
திருத்தணி:திருத்தணி, காந்திரோடு பகுதியில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பவுர்ணமி தோறும் அம்மன் ஊஞ்சல் சேவை, அமாவாசைகளில் சிறப்பு பூஜை, சித்திரை மாதம், 108 பால்குட ஊர்வலம் மற்றும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தீமிதி விழா போன்ற விழாக்கள் வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது.
குறிப்பாக தீமிதி விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பர்.
இந்நிலையில், இக்கோவிலின் கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு பின், வரும் 9ம் தேதி காலையில், மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
இதற்காக, கோவில் வளாகத்தில் யாகசாலைகள் மற்றும் திருப்பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.