/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் கவிழ்ந்த தண்ணீர் லாரி அதிர்ஷ்டவசத்தில் தப்பிய ஓட்டுநர்
/
சாலையில் கவிழ்ந்த தண்ணீர் லாரி அதிர்ஷ்டவசத்தில் தப்பிய ஓட்டுநர்
சாலையில் கவிழ்ந்த தண்ணீர் லாரி அதிர்ஷ்டவசத்தில் தப்பிய ஓட்டுநர்
சாலையில் கவிழ்ந்த தண்ணீர் லாரி அதிர்ஷ்டவசத்தில் தப்பிய ஓட்டுநர்
ADDED : பிப் 09, 2025 09:35 PM
திருவேற்காடு:திருவேற்காடு, வேலப்பன்சாவடி சிக்னல் அருகே, நேற்று நள்ளிரவு தண்ணீர் லாரி சென்று கொண்டிருந்தது.
வேலப்பன்சாவடி பாலத்தின் மீது ஏற முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரி ஓட்டுநரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 50, என்பவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 20,000 லிட்டர் குடிநீரும் சாலையில் கொட்டியது. தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், இரண்டு 'கிரேன்' உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.