தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆட்டோக்கள் செல்ல தடை ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

 ஆட்டோக்கள் செல்ல தடை ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

 ஆட்டோக்கள் செல்ல தடை ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 25, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி: 'திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் ஆட்டோக்களில் செல்வதால், கோவில் நிர்வாகம் விசேஷ நாட்களை காரணம் காட்டி, ஆட்டோக்களுக்கு தடை விதிக்க கூடாது' என, ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி கமலா தியேட்டர் அருகே, திருத்தணி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, தலைவர் ராஜா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதிய ஆட்டோக்கள் வாங்கும் போது, அரசு சார்பில், 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க., அரசு, உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு, எப்.சி., கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

நலவாரியம் நிதியை பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் துறையின் சார்பில் இலவச வீடு அல்லது வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்கள் அதிகளவில் ஆட்டோவை பயன்படுத்துகின்றனர். ஆனால், கோவில் நிர்வாகம் விஷேச நாட்கள் எனக் கூறி, ஆட்டோக்கள் செல்ல தடை விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

திருத்தணி அரசு மருத்துவமனைகளில் ஆட்டோவுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us