/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் பள்ளி வேன் கண்ணாடியை உடைத்த போதை நபருக்கு வலை
/
தனியார் பள்ளி வேன் கண்ணாடியை உடைத்த போதை நபருக்கு வலை
தனியார் பள்ளி வேன் கண்ணாடியை உடைத்த போதை நபருக்கு வலை
தனியார் பள்ளி வேன் கண்ணாடியை உடைத்த போதை நபருக்கு வலை
ADDED : ஜன 29, 2025 12:40 AM

திருத்தணி:சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அரசு கல்லுாரி அருகே, தனியார் சி.பி.சி.எஸ்., பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களை தினமும் பள்ளி நிர்வாகம் பேருந்து மற்றும் வேன் போன்ற வாகனங்கள் பள்ளிக்கு அழைத்து வந்து பின் வீட்டிற்கு கொண்டு சென்று விடுகின்றனர்.
அந்த வகையில், நேற்று மாலை, பள்ளி முடிந்ததும் மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி வேன் மூலம் ஏற்றிக் கொண்டு, அங்கு இறக்கிவிட்டு மீண்டும் பள்ளி வேன் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது.
பட்டாபிராமபுரம் அருகே  சாலையின் நடுவில் மதுபோதையில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் வேனுக்கு வழிவிடாமல் தகராறு செய்து கொண்டிருந்தார்.  பள்ளி வேன் ஓட்டுனர் ஓரம் போக சொன்னதால் ஆத்திரமடைந்த போதை நபர் வேனின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கினார்.
இதுதவிர, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவின் கண்ணாடியையும் போதை நபர் உடைத்து விட்டு தப்பியோடினார். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தும், தப்பியோடி போதை நபர் மீது வழக்கு பதிந்த தேடி வருகின்றனர்.

