/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளியில் ஜன்னல் உடைப்பு 'போதை' நபர்கள் அட்டகாசம்
/
அரசு பள்ளியில் ஜன்னல் உடைப்பு 'போதை' நபர்கள் அட்டகாசம்
அரசு பள்ளியில் ஜன்னல் உடைப்பு 'போதை' நபர்கள் அட்டகாசம்
அரசு பள்ளியில் ஜன்னல் உடைப்பு 'போதை' நபர்கள் அட்டகாசம்
ADDED : டிச 24, 2025 05:44 AM

திருத்தணி: திருத்தணி அரசு பள்ளி சமையலறை கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை, போதை நபர்கள் அடித்து உடைத்துள்ளனர்.
திருத்தணி பெரியார் நகரில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 120-க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் பயின்று வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன், பள்ளி வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், மது அருந்திவிட்டு சமையலறை கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அதன்பின், பள்ளி வகுப்பறை கதவுகள் மீது செங்கற்களை எறிந்து, பள்ளி வளாகத்திலேயே மதுபாட்டில்களை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:
பெரியார் நகர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கூரையை சீரமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
சுற்றுச்சுவர் இல்லாத வழியில் மர்மநபர்கள் சிலர் பள்ளிக்குள் நுழைந்து, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து, திருத்தணி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

