தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடிபோதையில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

 குடிபோதையில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

 குடிபோதையில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : பிப் 12, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, குடிபோதையில் நடந்து சென்றவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் வசித்தவர் தமிழரசன், 36; பெயின்டர்.

இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில், குடி போதையில் மாதர்பாக்கத்தில் இருந்து போந்தவாக்கம் நோக்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, போந்தவாக்கம் அருகே, தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில், மாதர்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us