தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அறிவுரை


ADDED : அக் 22, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

நேற்று மாணவர்கள்இடையே ஊத்துக் கோட்டை டி.எஸ்.பி., சாந்தி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:

மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளி நேரங்களில் மாணவர்கள் சாலையில் திரிய கூடாது. உங்களது பெற்றோர்கள் தங்களுக்கு கிடைக்க கூடிய கல்வி தங்களது பிள்ளைகளான உங்களுக்கு கிடைக்க பாடுபட்டுபள்ளிக்கு அனுப்புகின்றனர். மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்க வேண்டும்.

அப்போது தான் உங்கள்பெற்றோர் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும்.ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்க வேண்டும். மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடக்கூடாது.

இவ்வாறு அவர்பேசினார்.

ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us