/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணும் எழுத்தும் பயிற்சி வாயிலாக ஆசிரியர்களின் திறன் மதிப்பிடப்படும் கல்வி துறை அதிகாரிகள் தகவல்

ADDED : ஜூன் 16, 2025 11:24 PM
திருவாலங்காடு, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் நோக்குடன், சிறப்பு பயிற்சி வட்டார கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
மாநிலம் முழுதும் நடைபெற்று வரும், 'எண்ணும் எழுத்தும்' பயிற்சியின் ஒரு பகுதியாக, திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த 230 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.
'அரும்பு, மொட்டு, மலர்' என, மூன்று நிலைகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, அந்த நிலைக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
அதற்காக, ஆசிரியர் கையேடு, மாணவர் கையேடு மற்றும் பாடநுால்களின் உள்ளடக்கங்களை அடிப்படையாக கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் வழிகாட்டியாக இருந்து, நாள் ஒன்றில் ஐந்து கட்டங்களாக வகுப்புகள் நடைபெற்றன. ஒவ்வொரு கட்டத்திலும், 50 பேர் வீதம் பயிற்சியில் பங்கேற்றனர்.
கடந்த 12ம் தேதி துவங்கிய பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த பயிற்சி வாயிலாக, ஆசிரியர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.