தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாவட்ட நுாலகத்தில் கல்வி வளர்ச்சி தினம்

மாவட்ட நுாலகத்தில் கல்வி வளர்ச்சி தினம்

மாவட்ட நுாலகத்தில் கல்வி வளர்ச்சி தினம்


UPDATED : ஜூலை 16, 2026 05:05 PM

ADDED : ஜூலை 16, 2026 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 05:05 PM ADDED : ஜூலை 16, 2026 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட மைய நுாலகத்தில், கல்வி வளர்ச்சி தினம் கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வர் காமராஜரின், 124வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட மைய நுாலகத்தில், கல்வி வளர்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

திருவள்ளூர் நகராட்சி முன்னாள் தலைவர் பாஸ்கர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காமராஜர் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட நுாலக அலுவலர் சரஸ்வதி பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வாசகர்கள், நுாலகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us