ADDED : செப் 09, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஜெயபாலன், 75 என்ற முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி அருகே காட்டு அப்பாவரம் கிராமத்தில் வசித்தவர் ஜெயபாலன், 75. சில ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்த நிலையில், மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார்.
ஆபத்தான நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
