ADDED : அக் 24, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் சென்ற முதியவர் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அருகே கண்ணம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் சீனிவாசன், 72. நேற்று காலை, கவரைப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் தடா நோக்கி, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் பகுதியில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

