ADDED : ஜூலை 14, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, ஜூலை 15---
திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி, 69. இவர், நேற்று முன்தினம் திருவாலங்காடு சென்றுவிட்டு, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
வீரராகவபுரம் அருகே வந்தபோது, ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தார்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.