ADDED : செப் 29, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, செப். 30–
திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 67. இவர், தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். கடந்த 25ம் தேதி, காலை 6:00 மணிக்கு, வழக்கம் போல் மாரியப்பன், தனது வீட்டில் இருந்து, நடைபயிற்சிக்காக புதிய பேருந்து நிலையம் வரை சென்றார்.
வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால், அவரது மகன் விஜய், புதிய பேருந்து நிலையம், சுப்பிரமணியபுரம் குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினார்.
தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், நேற்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், காணாமல் போன மாரியப்பனை தேடி வருகின்றனர்.
