UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: சாலையில் நடந்து சென்ற, 76 வயது முதியவர், சரக்கு ஆட்டோ மோதி பலியானார்.
எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 76. இவர் நேற்று முன்தினம், தண்டலம் பஜாரில் டீ குடித்து விட்டு, காக்கவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு, சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ, இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
