/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டிற்குள் மயங்கி கிடந்த முதியவர் மீட்பு
/
வீட்டிற்குள் மயங்கி கிடந்த முதியவர் மீட்பு
ADDED : ஆக 22, 2025 02:26 AM

திருத்தணி:வீட்டிற்குள் மயங்கி கிடந்த முதியவர் மீட்கப்பட்டார்.
திருத்தணி காந்தி நகர் தீப்பாத்தியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஜோசப், 85. இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு படுக்க சென்றார்.
நேற்று காலை, 9:00 மணி வரை வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினர் கதவை பல முறை தட்டியும் திறக்கவில்லை. வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது ஜோசப் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து முதியவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். முதியவர் நலமுடன் உள்ளார்.