/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் படிக்கட்டில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி
/
பஸ் படிக்கட்டில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி
பஸ் படிக்கட்டில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி
பஸ் படிக்கட்டில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி
ADDED : டிச 24, 2024 12:20 AM
ஆவடி, ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா, 64. இவர், நேற்று காலை அரக்கோணத்தில் உள்ள மகன் வீட்டிற்கு செல்ல, தடம் எண்: '77 இ' அரசு பேருந்தில் பயணித்தார்.
காலை நேரம் என்பதால், பேருந்தில் 102 பெண்கள் உட்பட, 136 பேர் பயணித்தனர். பேருந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி, 58, என்பவர் ஓட்டினார்.
ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் அருகே, பேருந்து பள்ளத்தில் ஏறி இறங்கும் போது, படிக்கட்டு அருகே நின்றிருந்த கிரிஜா, சாலையில் துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.