UPDATED : அக் 10, 2026 06:54 PM
ADDED : அக் 10, 2026 06:06 PM
திருவள்ளூர்: தேர்தல் கல்வியறிவு குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு, நேற்று தேர்தல் நடைமுறை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தம் நிறைவடைந்த நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை, புதிய பட்டியலில் சேர்க்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சார்பில், கல்லுாரிகளில் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட தேர்தல் கல்வியறிவு குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு, பயிற்சி மற்றும் தேர்தல் நடைமுறை விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது.
இதில், கலெக்டர் கவிதா தலைமை வகித்து, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், தேர்தல் கல்வியறிவு குழு ஒருங்கிணைப்பாளர்களிடம், 18 வயது பூர்த்தியடைந்தோரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
