தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் தேர்தல் நடத்தை விதிமுறை கேள்விக்குறி

 மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் தேர்தல் நடத்தை விதிமுறை கேள்விக்குறி

 மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் தேர்தல் நடத்தை விதிமுறை கேள்விக்குறி


ADDED : மார் 18, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் கண்காணிப்பு இல்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க, தமிழகம் முழுதும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வரும் நிலையில், சோதனைச்சாவடிகளில் போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் ஒன்றான, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது.

தினமும் பல்லாயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், இந்த சோதனைச்சாவடி வழியாக கடந்து செல்கின்றன. இங்கு, ஒவ்வொரு தேர்தலின் போதும், 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்வது வழக்கம்.

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருப்பதால், கடமைக்கு கூட போலீசார் வாகன சோதனை மேற்கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், தாராளமாக தமிழகத்திற்குள் சென்று வருகின்றன.

தமிழக சட்டசபை தொகுதிகளில் வரிசை எண் படி முதல் இடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். உடனே, சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us