அலுவலர்களுடன் தேர்தல் :சிறப்பு பார்வையாளர் ஆலோசனை
அலுவலர்களுடன் தேர்தல் :சிறப்பு பார்வையாளர் ஆலோசனை
ADDED : ஏப் 06, 2026 10:33 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த தேர்தலை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும், பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், உதவி செலவின பார்வையாளர்கள் மற்றும் வருமான வரித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர், பிரதாப் சிங் தேர்தல் அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்தும், பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பிரதாப், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஆவடி மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
