ADDED : செப் 24, 2024 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன், 65 . இவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நீர் இறைக்க மின் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கிணற்றில் இருந்த மின்மோட்டாரை திருடிச் சென்றனர்.
நேற்று காலை மின் மோட்டார் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி ஞானசேகரன் இதுகுறித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் படி வழக்கு பதிந்த போலீசார் மின் மோட்டார் திருடியவரை தேடி வருகின்றனர்.