ADDED : ஜூன் 29, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திரு த்தணி அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 40. விவசாயி. இவரது விவசாய கிணறுக்கு சென்ற, 35 மீட்டர் மின் ஒயரை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து, மோகன் கொடுத்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, மின் ஒயரை திருடிய என்.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த உதயகுமார், 26, என்பவரை, நேற்று கைது செய்து, மின் ஒயரை பறிமுதல் செய்தனர்.
