/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் படைவீரருக்கு 'எலக்ட்ரீஷியன்' பயிற்சி
/
முன்னாள் படைவீரருக்கு 'எலக்ட்ரீஷியன்' பயிற்சி
ADDED : நவ 13, 2025 08:16 PM
திருவள்ளூர்: முன்னாள் படைவீரர்கள் மறுவேலைவாய்ப்பு பெறும் வகையில், திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள், மறுவேலைவாய்ப்பு பெற ஏதுவாக, 'எலக்ட்ரீஷியன்' திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ளோர், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாத்தின் கீழ்த்தளத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - -2959 5311 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். மேலும், exweltlr@tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

