/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நட்சத்திர குறியீடு மின்சாதனங்களை பயன்படுத்த மின்வாரியம் அறிவுரை
/
நட்சத்திர குறியீடு மின்சாதனங்களை பயன்படுத்த மின்வாரியம் அறிவுரை
நட்சத்திர குறியீடு மின்சாதனங்களை பயன்படுத்த மின்வாரியம் அறிவுரை
நட்சத்திர குறியீடு மின்சாதனங்களை பயன்படுத்த மின்வாரியம் அறிவுரை
ADDED : ஜன 09, 2025 02:30 AM

பொன்னேரி:தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில், மின்சிக்கன வார விழாவை முன்னிட்டு, நேற்று, பொன்னேரி கோட்டத்தில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் பாண்டியன் தலைமையில் நடந்தது. பொன்னேரி துணை மின்நிலைய வாயிலில் நடந்த இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என, ஏராளமானோர் பங்கேற்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வில் பொதுமக்களிடம் கூறியதாவது:
'நட்சத்திர குறியீடு கொண்ட மின்விசிறி, ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனஙகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்: சூரிய மின்ஒளி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்;
வீடுகளில் தேவையில்லா இடங்களில் மின்விளக்குகள் மற்றும் மின்சாதனங்கள் அணைத்து வைப்பதன் வாயிலாக மின்சேமிப்பு செய்யலாம்;
ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பு, இரண்டு யூனிட் மின் உற்பசத்திக்கு சமமாகும். குண்டு மற்றும், சி.எப்.எல்.,., பல்புகளை தவிர்த்து, எல்.இ.டி., பல்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
சூரிய ஒளியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்களை வீடுகளில் பொருத்தி மின்சாரத்தை சேமிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின், 'மின்சாரம் நாட்டின் ஆதாரம், மின் சிக்கனம் செய்வோம், இயற்கை வளங்களை காப்போம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு' என, கோஷம் எழுப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

