/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரைகுறையாக அகற்றப்பட்ட செடிகள் கடமைக்கு பணியாற்றிய மின்வாரியம்
/
அரைகுறையாக அகற்றப்பட்ட செடிகள் கடமைக்கு பணியாற்றிய மின்வாரியம்
அரைகுறையாக அகற்றப்பட்ட செடிகள் கடமைக்கு பணியாற்றிய மின்வாரியம்
அரைகுறையாக அகற்றப்பட்ட செடிகள் கடமைக்கு பணியாற்றிய மின்வாரியம்
ADDED : ஜூலை 28, 2025 11:31 PM

பொன்னேரி, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மின்வாரிய அலுவலகத்தை சூழ்ந்த செடி, கொடிகள் அரைகுறையாக அகற்றி, சாலை மற்றும் கால்வாயில் வீசியிருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அலுவலக கட்டடங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன.
இதுகுறித்து, கடந்த 21ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, மின்வாரிய ஊழியர்கள் செடி, கொடிகளை அரைகுறையாக அகற்றிவிட்டு, அங்குள்ள மழைநீர் கால்வாய் மற்றும் சாலையோரத்தில் போட்டனர். இதனால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
உயர் அதிகாரிகளுக்கு பதில் அளிப்பதற்காக, கடமைக்கு அரைகுறையாக பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, துணைமின் நிலைய வளாகம் முழுதும் உள்ள செடி, கொடிகளை முழுவதுமாக அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.