/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கம்பால் முட்டு கொடுத்து மின்வாரியம் வினோத முயற்சி
/
கம்பால் முட்டு கொடுத்து மின்வாரியம் வினோத முயற்சி
ADDED : ஜன 15, 2025 11:46 PM

ஊத்துக்கோட்டை,திருவள்ளூர் மாவட்டம், கிராமங்கள் சூழ்ந்த பகுதி. இங்கு விவசாயம், கால்நடை வளர்த்தல் ஆகியவை முக்கிய தொழில்கள். இங்குள்ள விவசாய நிலங்கள் வழியே, மின்கம்ங்கள் இடையே மின் ஒயர்கள் செல்கின்றன. இதில் பெரும்பாலான மின்கம்பங்கள் கான்கிரீட் பெயர்ந்து காணப்படுகின்றன.
இதில், ஊத்துக்கோட்டை வட்டம், அனந்தேரி - போந்தவாக்கம் இடையே விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் மின்ஒயர் செல்லும் பகுதியில், மின்கம்பம் நட்டு வைக்காமல் கம்பு நட்டு, அதன் வாயிலாக மின்ஒயர் செல்கிறது.
பலத்த காற்று வீசும் நிலையில் கம்பு சாய்ந்து, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது மின் ஒயர் விழும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேற்கண்ட பகுதியில் சிமென்ட் மின்கம்பம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.