/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாயமாகும் மின்வாரிய அலுவலகம்: பொன்னேரி மக்கள் அச்சம்
/
மாயமாகும் மின்வாரிய அலுவலகம்: பொன்னேரி மக்கள் அச்சம்
மாயமாகும் மின்வாரிய அலுவலகம்: பொன்னேரி மக்கள் அச்சம்
மாயமாகும் மின்வாரிய அலுவலகம்: பொன்னேரி மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 21, 2025 02:52 AM

பொன்னேரி:பொன்னேரி துணைமின் நிலைய வளாகத்தில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், இங்கு வரும் மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 33 கி.வாட் துணைமின் நிலையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.
தினமும் புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, மின்வாரிய அலுவலகத்திற்கு மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த வளாகம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், பல்வேறு பிரிவு அலுவலகங்கள் செயல்படும் கட்டடங்கள் மற்றும் மின்மாற்றிகள் உள்ள பகுதிகளை சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன.
அவ்வப்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், அலுவலகம் உள்ளேயும் வந்து செல்வதால், குடியிருப்புவாசிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
மின்வாரிய அலுவலக வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றிவிட்டு, துாய்மையாக வைத்திருக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.