/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனை வாயிலில் மின் திருட்டால் விபத்து அபாயம்
/
அரசு மருத்துவமனை வாயிலில் மின் திருட்டால் விபத்து அபாயம்
அரசு மருத்துவமனை வாயிலில் மின் திருட்டால் விபத்து அபாயம்
அரசு மருத்துவமனை வாயிலில் மின் திருட்டால் விபத்து அபாயம்
ADDED : நவ 02, 2025 01:51 AM

ஆர்.கே.பேட்டை: அரசு மருத்துவமனை வாயிலில் உள்ள மின் விளக்குக்கு கொக்கி போட்டு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது.
ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் வாரியார் நகரில் அமைந்துள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
இந்த சுகாதார நிலையத்திற்கு, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பகுதி மக்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் கட்டப்படவில்லை. அரைகுறையாக கட்டப்பட்டுள்ள நுழைவாயில், தோரண வாயில் வழியாகவே மக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
நுழைவாயில், தோரண வாயில் கட்டமைப்புக்காக நிறுவப்பட்டுள்ள இரும்பு கம்பிகளில், மின்விளக்கு உள்ளது.
இந்த மின்விளக்கிற்கு, அதற்கு மேலே செல்லும் மின்கம்பியில் இருந்து நேரடியாக கொக்கி போட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இரவு பகலாக தொடர்ந்து எரிகிறது.
கொக்கி போட்டு ஆபத்தான முறையில் மின் இணைப்பு எடுக்கப்பட்டுள்ளதால், சுகாதார நிலையத்திற்கு வரும் பகுதி மக்கள் மின்விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். மின் விளக்குக்கு பாதுகாப்பான இணைப்பு வழங்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

