/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்னணு தகவல் பலகை 'அவுட்' விரைவு ரயில் பயணியர் பரிதவிப்பு
/
மின்னணு தகவல் பலகை 'அவுட்' விரைவு ரயில் பயணியர் பரிதவிப்பு
மின்னணு தகவல் பலகை 'அவுட்' விரைவு ரயில் பயணியர் பரிதவிப்பு
மின்னணு தகவல் பலகை 'அவுட்' விரைவு ரயில் பயணியர் பரிதவிப்பு
ADDED : பிப் 13, 2026 05:19 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலைய நடைமேடையில், ரயில் பெட்டி நிற்கும் மின்னணு தகவல் பலகை செயல்படாததால், பயணியர் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக, 60 விரைவு ரயில்கள், 260 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்தில், ஆறு நடைமேடைகள் உள்ளன. அவற்றில், 1,2 மற்றும் 3வது நடைமேடைகளில், விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. தற்போது, திருவள்ளூரில், திருப்பதி, ஏற்காடு, பெங்களூரு டபுள் டெக்கர், பாலக்காடு, கோவை உள்ளிட்ட, 12 விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த ரயில்களில், தினமும், நுாற்றுக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.
விரைவு ரயில்கள் நின்று செல்லும், மூன்று நடைமேடைகளிலும், மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதில், நடைமேடையில் ரயில்களின் பெட்டி எண் குறித்த தகவல் இடம்பெறும். சமீப நாட்களாக, அந்த மின்னணு தகவல் பலகை செயல்படாமல் உள்ளது. இதனால், தாங்கள் பயணம் செய்ய உள்ள, ரயில் பெட்டி எண் தெரியாமல், பயணியர் பரிதவித்து வருகின்றனர்.
எனவே, ரயில்வே நிர்வாகம், மின்னணு தகவல் பலகையை சீரமைக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

