ADDED : பிப் 08, 2024 11:22 PM

அ நிறம் | அளவு
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பிரையாங்குப்பம் ஊராட்சியில், நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு, நடமாடும் வாகனம் மூலம் பகுதிவாசிகளுக்கு ஓட்டுப்பதிவு குறித்து விளக்கி கூறப்பட்டது.
இந்த செயல்முறை வாகனத்தில் உள்ள மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பகுதிவாசிகள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
இந்த விழிப்புணர்வில், கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கினார். இதேபோல் வெண்மனம்புதுார் பகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை விழிப்புணர்வு நடந்தது.
