/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்னணு ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவக்கம்
/
மின்னணு ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவக்கம்
மின்னணு ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவக்கம்
மின்னணு ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவக்கம்
ADDED : டிச 12, 2025 06:37 AM

திருவள்ளூர்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில், 3,699 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. அந்த மையங்களில், தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணி, நேற்று துவங்கியது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார்.
பெங்களூர் 'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த, 13 பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 நாட்கள் வரை தொடர்ந்து நடைபெறும் பணியை, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பார்வையிடலாம். அவர்கள், மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்களை உள்ளே கொண்டு வர அனுமதியில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

