ADDED : மார் 15, 2026 06:01 AM
திருவள்ளூர்: காக்களூர் தொழிற்பேட்டைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் தொழிற்பேட்டையில், தண்ணீர்குளம் கிராமத்தில் 'சிட்கோ'விற்கு சொந்தமான, 6 கோடி ரூபாய் மதிப்பிலான 73 சென்ட் நிலத்தை, தனிநபர் ஆக்கிரமித்துள்ளார்.
அந்த நிலத்தை மீட்க, சிட்கோ நிர்வாகம், 2018ம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
கடந்த, 2023ம் ஆண்டு, ஆக்கிரப்பாளரிடமிருந்து சிட்கோ நிறுவனத்தால் மீட்கப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டன. இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர், எல்லை கற்களை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தார்.
இதையடுத்து, நேற்று, வருவாய், காவல் துறையினருடன் மீண்டும் அந்த இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பாளரால் அப்புறப்படுத்தப்பட்ட எல்லை கற்கள் மீண்டும் நடப்பட்டன.
