/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் முனைவு திட்டம் விண்ணப்பம் வரவேற்பு
/
தொழில் முனைவு திட்டம் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 11, 2025 09:07 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட 'தாட்கோ' வாயிலாக செயல்படுத்தப்படும் தொழில் முனைவு திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட 'தாட்கோ' வாயிலாக, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாய மக்கள், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மிகவும் பயனுள்ளதாக அமையும். இதற்காக, நடப்பு 2025 - 26ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் பயன்பெற, 18 - 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஜாதி சான்று, வருமான சான்று, ரேஷன் கார்டு, விலை புள்ளி, திட்ட அறிக்கை, ஆதார் அடையாள அட்டை, வங்கி புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வாகன கடனுக்கு ஓட்டுநர் உரிமம் நகல் ஆகிய சான்றுகளுடன் newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.