/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
/
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
ADDED : டிச 07, 2024 09:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கொடுவெளி, அலமாதியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், ஆதிதிராவிட பெண்களுக்கு, பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி முகாம், நடந்தது.
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சண்முகவள்ளி ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், நடந்த பயிற்சியில், ஐஸ்கிரீம், பால்கோவா, பன்னீர், நெய், ரோஸ்மில்க் உள்ளிட்ட பால்பொருட்கள் தயாரிப்பு; விற்பனை வாய்ப்பு, உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழ் பெறுவது குறித்து செயல்விளக்க பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் குமாரவேலு, பேராசிரியர்கள் ஞானலட்சுமி, மாதங்கி மற்றும் கீதா ஆகியோர் தொழிற்பயிற்சி அளித்தனர்.