/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
/
சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
ADDED : ஏப் 19, 2025 10:00 PM
திருவள்ளூர்:கடம்பத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொப்பூர் ஊராட்சியில் நேற்று, திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை இணைந்து 'சுற்றுப்புற சூழல் -- நட்பு சூழல்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பிரதாப், மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தனர்.
பின், கலெக்டர் கூறியதாவது:
சுற்றுப்புற சூழல்களை பாதுகாக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு முன்னெடுப்பு பணியை எடுத்து வருகிறது. நம் மாவட்டம் அதிகமான தொழில் வளர்ச்சி உள்ள பகுதியாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவசாய நிலங்களை அழித்து வருகிறோம்.
வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியால், இயற்கை சுற்றுச்சூழல் படிப்படியாக குறைந்து வருகிறது. இயற்கையான வெப்பநிலையை காட்டிலும் 2 - 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக உள்ளது.
இதுபோன்று, மரக்கன்று நடப்படும் பணியை மேற்கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் திருவள்ளூர் மாவட்டம் முன்மாதிரியாக விளங்கி வருகிறது என்ற சாதனையை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

