/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
/
அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 12, 2024 11:47 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் லதா தலைமையில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
மாணவியர் இடையே கோலப்போட்டி, மெகந்தி போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆரணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் காவேரி தலைமையில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
புதுகும்மிடிப்பூண்டி அடுத்த கரும்புகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில், தலைமை ஆசிரியர் பொறுப்பு பியூலா தலைமையில் சமத்துவ பொங்கல் விழாவும், மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
பள்ளிப்பட்டு அடுத்த சுரைக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சம்பத் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
lதிருமழிசை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் வடிவேல் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
வார்டு உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் புகையில்லா போகி விழிப்புணர்வு நடந்தது.
இதேபோல் கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தலைமையில் ஒன்றிய அலுவலர்கள் எஸ். வரதராஜன், கே. வேதநாயகி ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.