/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாரதிதாசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
/
பாரதிதாசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை ஒட்டி, மாணவர்களின் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தொடர்ந்து, தமிழரின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் விதமாக, கலப்பை கிராமிய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த விழாவை பள்ளி தாளாளர் உமாசங்கர் துவக்கி வைத்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், தலைமையாசிரியர், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மாணவ- - மாணவியர் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர்.