/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகைச்சுவை போட்டி எருக்குவாய் பள்ளி மாணவி முதலிடம்
/
நகைச்சுவை போட்டி எருக்குவாய் பள்ளி மாணவி முதலிடம்
ADDED : ஜன 09, 2025 02:40 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எருக்குவாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி ர.திவானி, 12; தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டியில், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில், நகைச்சுவை வழங்குதல் பிரிவில் முதல் இடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானார்.
திருப்பூர் மாவட்டத்தில் இம்மாதம், 4ம் தேதி நடந்த மாநில அளவிலான நகைச்சுவை வழங்கல் போட்டியில் முதல் இடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவி திவானிக்கு, பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

