தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
ADDED : மார் 21, 2026 03:25 PM
திருவள்ளூர்;தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, 65 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டபை தேர்தல், வரும் மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில், முன்னாள்
படைவீரர்களை, சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, 65 வயதிற்குட்பட்ட, திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடலாம். விருப்பம் இருப்பின், அவர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், ஜெ.என்., சாலை, திருவள்ளூர் -602001 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 044 29595311 என்ற தொலைபேசியிலோ, exweltlr@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
