/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெளிவட்ட சாலையை ஒட்டி உடற்பயிற்சி பூங்கா மீஞ்சூரில் ரூ.2.57 கோடியில் பணிகள் தீவிரம்

ADDED : பிப் 11, 2025 12:24 AM

மீஞ்சூர், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, மீஞ்சூர் - வண்டலுார் இடையே, 62 கி.மீ., தொலைவிற்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில்உள்ளது.
இந்த திட்டத்திற்காக, 400 அடி அகலத்திற்கு இடம் கையகப்படுத்தப்பட்டு, அதில், 164 அடியில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடம், ரயில் பாதை மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு வசதிகளுக்கு என, ஒதுக்கப்பட்டு உள்ளது.
தற்போது, இந்த இடங்களில் புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வருகிறது.
இந்த சாலையின் பல்வேறு பகுதிகளில், தமிழக தொழில் மேம்பாட்டு நிறுவனமான, டிட்கோ, டைடல் பார்க், ஆவின், தமிழக சிறு தொழில் நிறுவனமான டான்சிட்கோ, தீயணைப்புத் துறை ஆகியவற்றிற்கு, நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, நான்கு இடங்களில், உடல் திறன் மேம்பாட்டிற்கான பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மீஞ்சூர் பகுதியில், 2.57 கோடி ரூபாயில் இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு, உடற்பயிற்சி செய்வதற்கான வளாகம், திறந்தவெளி தியேட்டர், குழந்தைகள் விளையாடும் பகுதி, யோகா புல்வெளி, கார் மற்றும் பைக் நிறுத்துவதற்கு தனி இடம், என, ஒரு ஏக்கர் பரப்பில் இது  அமைகிறது.
இவற்றிற்கான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு மாதங்களில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.