sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலை சேதமடைந்ததால் விபத்து அபாயம்

/

 விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலை சேதமடைந்ததால் விபத்து அபாயம்

 விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலை சேதமடைந்ததால் விபத்து அபாயம்

 விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலை சேதமடைந்ததால் விபத்து அபாயம்


ADDED : பிப் 17, 2026 06:16 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட நான்கு வழி நெடுஞ்சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர்.

கவரைப்பேட்டையில் இருந்து சத்தியவேடு நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், பூவலம்பேடு திடீர் நகர் முதல் வாணியமல்லி சந்திப்பு வரையிலான, 4 கி.மீ., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 25 கோடி ஒதுக்கி, கடந்தாண்டு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இச்சாலையில், வாணியமல்லி சந்திப்பு அருகே சாலையின் நடுவே பெரிய அளவில் சேதமடைந்தது.

ஒரு மாதம் கடந்த பின்னரும், சேதமடைந்த சாலை சீரமைக்கப்படவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us