/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த சித்த மருத்துவமனை கட்டடம் அகற்ற எதிர்பார்ப்பு
/
பாழடைந்த சித்த மருத்துவமனை கட்டடம் அகற்ற எதிர்பார்ப்பு
பாழடைந்த சித்த மருத்துவமனை கட்டடம் அகற்ற எதிர்பார்ப்பு
பாழடைந்த சித்த மருத்துவமனை கட்டடம் அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஜன 14, 2024 11:52 PM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் உள்ள அரிசந்திராபுரம் சாலையில், 40 ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவமனை கட்டடம் அமைக்கப்பட்டு, மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டடம் மிகவும் சேதமடைந்தது. பின், மருத்துவமனை மூடப்பட்டது. தற்போது, சித்த மருத்துவமனை திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த கட்டடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள நிலையில், அதை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், மருத்துவமனை கட்டடம் விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி உள்ளது. இதனால் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குழந்தைகள் வெளியில் விளையாட முடியாத நிலை உள்ளதாகவும் புலம்புகின்றனர்.
இந்நிலையில், பாழடைந்த கட்டடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.