/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வசூல் வேட்டை:தலைமை காவலர் 'சஸ்பெண்ட்' ஊர்காவல் படைவீரர் 'டிஸ்மிஸ்'
/
வசூல் வேட்டை:தலைமை காவலர் 'சஸ்பெண்ட்' ஊர்காவல் படைவீரர் 'டிஸ்மிஸ்'
வசூல் வேட்டை:தலைமை காவலர் 'சஸ்பெண்ட்' ஊர்காவல் படைவீரர் 'டிஸ்மிஸ்'
வசூல் வேட்டை:தலைமை காவலர் 'சஸ்பெண்ட்' ஊர்காவல் படைவீரர் 'டிஸ்மிஸ்'
ADDED : ஜன 23, 2025 08:46 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், லாரியை மடக்கி பணம் வசூல் செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் மற்றும் ஊர்க்காவல் படை வீரரை பணி நீக்கம் செய்து, எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவரப்பேட்டை  - சத்தியவேடு கூட்டு சாலையில், கடந்த 21ம் தேதி இரவு ரோந்து பணி மற்றும் வாகன சோதனை நடந்தது.
அப்போது பணியிலிருந்த கவரப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் கோபிநாத், 48 மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சரவணன், 27, ஆகிய இருவரும் அவ்வழியாக வந்த லாரிகளை வழிமறித்து பணம் வசூல் செய்த வீடியோ ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து, காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருவரும் நடந்து கொண்டதால், தலைமைக்காவலர் பணியிடை நீக்கம் மற்றும்  ஊர்க்காவல் படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.