ADDED : ஆக 18, 2026 04:42 PM
திருவள்ளூர், ஆக. 19–
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, அதிகமாக வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர், இன்று விசாரணை நடத்த உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக, போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் என்பவர், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி, இன்று மாலை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம், இன்று மாலை விசாரணை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
