புட்லுார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள்: ரயில்வே நிர்வாகத்திற்கு பயணியர் சங்கத்தினர் மனு
புட்லுார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள்: ரயில்வே நிர்வாகத்திற்கு பயணியர் சங்கத்தினர் மனு
UPDATED : செப் 24, 2026 05:15 PM
ADDED : செப் 24, 2026 04:06 PM
திருவள்ளூர்:புட்லுார் ரயில் நிலையத்தில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திற்கு, பயணியர் சங்கத்தினர் மனு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை - திருவள்ளூர் மார்க்கத்தில் புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. காக்களூர் தொழிற்பேட்டை, புட்லுார் அம்மன் கோவில் மற்றும் பல்வேறு பணி நிமித்தமாக, இந்த ரயில் நிலையத்தை, தினமும் 30 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புட்லுார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு, ரயில் பயணியர் சங்கத்தினர், தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பட்டியலிட்டு மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
புட்லுார் ரயில் நிலைய நடைமேம்பாலம் உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. அதனால், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள், வயதானோர் பயன்படுத்த முடியவில்லை. எனவே, கருதி, 'லிப்ட்' அமைக்க வேண்டும்.
நடைமேடை, மேம்பாலத்துடன் இணையும் இடத்தில் கூரை இல்லை. மழை காலத்திற்குள் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கணினி டிக்கெட் வழங்கும் மையம், விரைவு ரயில்கள் முன்பதிவு மையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர்களின் நலன் கருதி, 4வது நடைமேடை அமைத்து, புறநகர் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புட்லுாரில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அண்ணனுார் ரயில் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு செயல்பாட்டை, அருகில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
