/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை தீ விபத்து கரும்புகையால் பரபரப்பு
/
தொழிற்சாலை தீ விபத்து கரும்புகையால் பரபரப்பு
ADDED : பிப் 16, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் 'ஜெய் அம்பே' என்ற பெயரில் தனியார் ரப்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பழைய டயர்களில் இருந்து ரப்பர் துகள்கள், எண்ணெய், கம்பிகள் பிரிக்கப்படுகிறது.
நேற்று காலை அந்த தொழிற்சாலை, எண்ணெய் கசிவால் தீ பிடித்து எரிந்தது. அதிலிருந்து கிளம்பிய கரும்புகை அப்பகுதி முழுதும் சூழ்ந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்களும், தொழிலாளர்களும், தீயை அணைத்து கரும்புகையை கட்டுப்படுத்தினர்.
சிப்காட் வளாகத்தில், துர்நாற்றத்துடன் பரவிய கரும்புகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.