ADDED : ஜன 11, 2025 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, பில்லாக்குப்பம் கிராமத்தில், தனியார் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று, பல ஆண்டு காலமாக மூடிக் கிடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, மூன்று மர்ம நபர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு நடந்து சென்றனர்.
அதை கண்ட காவலாளி ராஜேஷ், மூவரையும் விரட்டி சென்றார். திருடிய பொருட்களை கீழே போட்டு மூவரும் தப்ப முயன்றனர். ஒருவர் மட்டும் சிக்கிய நிலையில் மற்ற இருவரும் தப்பி சென்றனர்.
பிடிபட்ட நபர், போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர், மாதர்பாக்கம் அடுத்த, சூரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், 38, என்பது தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.

