/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ADDED : மார் 28, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பந்திகுப்பம் அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் முனுசாமி, 50. இவர், விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை வயல்வெளிக்கு நடந்து சென்றார். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில், சம்பவ இடத்திலேயே முனுசாமி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.