/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
/
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
ADDED : டிச 04, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: மின்சாரம் பாய்ந்து விவசாயியும், அவர் ஓட்டி சென்ற பசு மாடும் உயிரிழந்தது.
கவரைப்பேட்டை அடுத்த கண்லுார் கிராமத்தில் வசித்தவர் பன்னீர்செல்வம், 60. விவசாயி. நேற்று, அவருக்கு சொந்தமான பசு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது, மின் கம்பம் ஒன்று சாய்ந்து கிடந்ததை அவர் கடந்து செல்லும் போது, மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. அதை காப்பாற்ற முயன்ற பன்னீர்செல்வம் மீது மின்சாரம் பாய்ந்து அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார்.

