/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டுப்பன்றியால் 6 ஏக்கர் கரும்பு நாசம் இழப்பீட்டு பணத்தை திரும்ப அளித்த விவசாயி
/
காட்டுப்பன்றியால் 6 ஏக்கர் கரும்பு நாசம் இழப்பீட்டு பணத்தை திரும்ப அளித்த விவசாயி
காட்டுப்பன்றியால் 6 ஏக்கர் கரும்பு நாசம் இழப்பீட்டு பணத்தை திரும்ப அளித்த விவசாயி
காட்டுப்பன்றியால் 6 ஏக்கர் கரும்பு நாசம் இழப்பீட்டு பணத்தை திரும்ப அளித்த விவசாயி
ADDED : அக் 31, 2025 10:28 PM
திருவள்ளூர்: காட்டுப்பன்றியால் பாதிப்படைந்த 6 ஏக்கருக்கு, வனத்துறை அளித்த, 1,500 ரூபாய் இழப்பீட்டு பணத்தை கரும்பு விவசாயி ஒருவர் கலெக்டரிடம் திருப்பிக் கொடுத்தார்.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
வடமதுரை ஏரியில் மதகு சேதமடைந்துள்ளதால், அதில் தேங்கிய தண்ணீர் வெளியேறி வருவதை தடுக்க வேண்டும். கால்நடைகளால், விவசாய நிலங்கள் சேதமடைந்து வருகிறது. சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால், போக்குவரத்து பாதிக்கிறது.
நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும், சேதமடைந்த கட்டடம், தார்ப்பாய் இல்லாதது போன்ற காரணங்களால் நெல் கொள்முதல் தாமதமாகி வருகிறது.
மேலும், வியாபாரிகளுக்கு, வருவாய்த்துறையினர் சிட்டா வழங்குவதால், விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்வதில், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
பள்ளிப்பட்டு - கோணசமுத்திரம் கால்வாயில் இரண்டு இடத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும். சோரஞ்சேரி அருகில், கூவம் ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், விவசாயிகளின் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்யுமாறு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
அப்போது கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், 6 ஏக்கர் கரும்பு பயிரை காட்டுப்பன்றி சேதப்படுத்தியதால், 60 டன் விளைச்சல் வரும் கரும்பு, 30 டன்னாக குறைந்து விட்டது.
இதற்கு இழப்பீட்டு தொகையாக, வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வனத்துறையினர் வழங்கினர். அந்த பணத்தை, அரசிடமே திரும்பித் தருகிறேன்.
காட்டுப்பன்றியை மட்டும், விளை நிலத்திற்குள் வரவிடாமல் தடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார். ஆனால், கலெக்டர் பணத்தை பெற்றுக்கொள்ளாமல், டி.டி.யாக கொடுங்கள் என கூறி, அந்த விவசாயிடமே கொடுத்தார்.

