/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை சீரமைப்பதில் மெத்தனம் ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
/
சாலையை சீரமைப்பதில் மெத்தனம் ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
சாலையை சீரமைப்பதில் மெத்தனம் ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
சாலையை சீரமைப்பதில் மெத்தனம் ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
ADDED : அக் 18, 2024 09:30 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆர்.டி.ஒ., தீபா தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: கரும்பு விவசாயிகள் நலன் கருதி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு உண்டான தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும்.
திருத்தணி நகருக்குள் செல்லும் முக்கிய பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பணியில் அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.